Saturday, August 8, 2009

இந்திய விவசாயிகளை பெருத்த நட்டத்திற்கும் தற்கொலைக்கும் தள்ளிய எம்.எஸ்.சுவாமிநாதன்.

by:

முத்தமிழ் வேந்தன்

உணவை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தும் நோக்கத்துடன் அமெரிக்க மேலாதிக்கத் திட்டத்தின் ஓர் அங்கமாகவே இந்நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. இவற்றின் மூலம், அதிக விளைச்சலைத் தரும் புதிய ரக விதைகள் என்ற பெயரில் கோதுமை,
நெல் மற்றும் பிற உணவு தானிய விதைகளை ஏழை நாடுகளுக்கு அமெரிக்கா விநியோகித்தது.
இப்புதிய வகை நெல் ரகங்கள் உள்நாட்டு பாரம்பரிய நெல் ரகங்களை படிப்படியாக
அழித்து, விதை நெல்லுக்காக அமெரிக்காவிடம் கையேந்தும் நிலையை உருவாக்கியது.

இதே நேரத்தில்இ தனது பார்ப்பன அதிகார வர்க்க செல்வாக்கையும் ஏகாதிபத்திய
நிறுவனங்களுடனான நெருங்கிய உறவையும் கொண்டு 1966இல் சுவாமிநாதன் இந்திய விவசாய ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனரானார். தனது அதிகாரத்தையும் செல்வாக்கையும்
கொண்டு அமெரிக்காவின் திட்டப்படி புதிய ரக கோதுமை, நெல் மற்றும் உணவு
தானியங்களை இந்திய விவசாயத்தில் திணித்தார். அரசின் ஆதரவோடு இந்திய
விவசாயத்தில் திணிக்கப்பட்ட இந்த மாற்றங்கள்தான் "பசுமைப் புரட்சி''
என்றழைக்கப்படுகிறது.

இந்தப் பசுமைப்புரட்சி இந்திய விவசாயத்தில் நோய் எதிர்ப்புத் திறன்,
மழைவெள்ளத்தில் நீடிக்கும் திறன், வறட்சியைத் தாங்கும் திறன் முதலான பல்வேறு
அரிய பண்புகளைக் கொண்ட பாரம்பரிய நெல் ரகங்களை ஒழித்துக் கட்டியது. தமிழகத்தின்
பாரம்பரிய நெல் ரகங்கள் அழிக்கப்பட்டு, .ஆர். வகை நெல் ரகங்கள் ஆக்கிரமித்தன. இவை புதிய
புதிரான நோய்களையும்இ களைகளையும் தொடர்ந்து உருவாக்கின. உரங்களும்இ பூச்சி
மருந்துகளும் வண்டி வண்டியாகக் கொட்டினால்தான் பயிர் வளரும் என்ற நிலைக்கு
இந்திய விவசாயம் தள்ளப்பட்டது. அதேநேரத்தில் ஏகாதிபத்திய உரம் மற்றும் பூச்சி
மருந்துக் கம்பெனிகள் பசுமைப் புரட்சியைச் சாதகமாக்கிக் கொண்டு கொள்ளை
இலாபமீட்டின.

இந்தியாவில் சட்டீஸ்கார் மாநிலத்தில் 20,000க்கும் மேற்பட்ட அரியவகை நெல் ரகங்களின் விதைகள்
டாக்டர் ரிச்சார்யா என்ற விவசாய விஞ்ஞானியால் சேகரிக்கப்பட்டு, அரசு பாதுகாத்து
வந்த நிலையில், அவற்றைக் கைப்பற்ற கைக்கூலி சுவாமிநாதனை அவை பயன்படுத்திக்
கொண்டன. மைய அரசின் விவசாயத் துறை முதன்மைச் செயலராகவும், பின்னர் மைய அமைச்சரவைக்கான அறிவியல் ஆலோசனைக் குழுவின் தலைவராகவும்இ திட்டக் கமிசனின் துணைத் தலைவராகவும் இருந்த எம்.எஸ்.சுவாமிநாதன்இ திடீரென ஒரே நாளில் அமெரிக்காவின் நெல் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனரானார். உலக அரங்கில் எந்த ஒரு நாட்டிலும் உணவு மற்றும் உணவுப் பாதுகாப்பு இரகசியங்களைக் கையாளும் ஓர் அரசு உயரதிகாரி, அமெரிக்க நிறுவனத்திலும் அதிகாரியாக இருக்கவே சாத்தியமில்லை. மிகப் பெரிய விவசாய நாடான இந்தியாவில்தான் இந்த அயோக்கியத்தனம் நடந்தது.

பசுமைப் புரட்சியின் மூலம் இந்திய விவசாயத்தையும் விவசாயிகளையும் நாசமாக்கிய
எம்.எஸ்.சுவாமிநாதன்இ இப்போது இரண்டாவது பசுமைப் புரட்சி என்ற பெயரில் மரபணு
மாற்றப் பயிர்களைப் பரவலாக்கும் வேலையில் இறங்கியுள்ளார். ஏற்கெனவே வாழ்விழந்து
நிற்கும் விவசாயிகளிடம் இயற்கை வேளாண்மையுடன் மரபணு மாற்றம் செய்யப்பட்ட
பயிர்களைப் பயிரிடுவதன் மூலம்இ நெருக்கடியிலிருந்து மீண்டு அதிக லாப மீட்ட
முடியும் என்று ஆதரவு திரட்டி வருகிறார்.

ஆனால், சுவாமிநாதனின் பரிந்துரைப்படி அரசின் ஆதரவோடு திணிக்கப்பட்ட, மான்சாண்டோ (Monsanto Corporation) நிறுவனத்தின் பி.டி. ரக பருத்தி, மண்ணை நஞ்சாக்கி நோய்கள் பெருகி இந்திய விவசாயிகளை பெருத்த நட்டத்திற்கும் தற்கொலைக்கும் தள்ளியது. ஆந்திராவிலும்
மகாராஷ்டிராவிலும் மட்டும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் கடன் சுமை தாளாமல்
தற்கொலை செய்து கொண்டனர்.

இதுமட்டுமின்றி, பல்வேறு கிராமங்களில் இணையதள வசதி கொண்ட கிராம தகவல் மையங்களை
உருவாக்கிஇ ஏகாதிபத்திய நிறுவனங்களுக்கு கிராமச் சந்தையின் தன்மை, தேவைகள்,
விநியோகச் சங்கிலி, கொள்முதல்இ ஒப்பந்த விவசாயம், நுகர்வு முதலானவற்றைப் பற்றிய
தகவல்களை அனுப்பும் மையமாக மாற்றியுள்ளார். கிராம மக்கள் பல்வேறு தகவல்களை
அறிந்து கொண்டு தமது வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ளவே இம்மையங்களை
உருவாக்கியுள்ளதாக சுவாமிநாதன் பசப்பினாலும், ஒட்டு மொத்த கிராமச் சந்தையைக்
கைப்பற்றத் துடிக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்குச் சேவை செய்யும் மையங்களாகவே
இவை அமைந்துள்ளன.

சுவாமிநாதனின் திட்டங்களை பைத்தியக்காரத்தனமான உளறல் என்று ஒதுக்கிவிட
முடியாது. அத்திட்டங்களுக்குப் பின்னே, ஏகாதிபத்தியங்களின் ஆதிக்க நலன் ஒளிந்து
கொண்டிருக்கிறது. பார்ப்பனஅதிகார வர்க்க செல்வாக்கும், பார்ப்பன தேசிய
பத்திரிகைகளின் ஆதரவும், எல்லாவற்றுக்கும் மேலாக ஏகாதிபத்தியங்களின் அருளும்
கொண்டிருப்பதால் அவரது திட்டங்கள் அரசால் செயல்படுத்தப்படுகின்றன. அவரது
ஏகாதிபத்திய கைக்கூலித்தனம் மூடிமறைக்கப்பட்டு, மாபெரும் விஞ்ஞானியாக
போற்றப்படுகிறார்.

No comments: