Wednesday, August 12, 2009

அர்ச்சிக்க உதவும் பூக்களும் அவற்றின் பயன்களும்...

நாம் இறைவனுக்கு எந்தப் பூக்களைக் கொண்டு அர்ச்சனை செய்வது? அந்த அர்ச்சனையால் நமக்கு என்ன பயன்கள் கிடைக்கும்? என்று இந்து மத புராணங்களில் கூறப்பட்டுள்ளது.அவற்றில் சில இங்கே...

இறைவனை அர்ச்சிக்க உதவும் பூக்கள்.

விநாயகர் - செம்பருத்தி, தாமரை, ரோஜாமலர்,அருகம்புல்.

முருகன் - மல்லிகை, முல்லை, சாமந்தி, ரோஜா, சூரியகாந்தி.

அம்மன் -மல்லிகை, முல்லை, செவ்வரளி, செம்பவளமல்லி, சூரியகாந்தி, வெண்தாமரை.

சிவன் -தும்பை, வில்வம, செந்தாமரை, செம்பருத்தி, புன்னை, வெள்ளெருக்கு, நந்தியாவட்டம், செண்பகம், இவை எட்டும் அட்டபுட்பங்கள் எனப்படும்.

விஷ்ணு - தாமரை, பவளமல்லி, மருக்கொழுந்து, துளசி.

நாம் அர்ச்சனை செய்யும் பூக்களால் நமக்குக் கிடைக்கும் பயன்கள்.

தாமரை - தெய்வீகப் பேருணர்வையும் சைத்திய சக்தியையும் தரும்.

ரோஜா -சரணாகதிப் பாவனை தந்து, ஆண்டவன்பால் இனிய எண்ணத்தையும் தந்து, தியானம் வளர்க்கும்.

அருகம்புல் -கண்பார்வையைப் பெருக்கும் நரம்புகளுக்கு வலிமையூட்டும்.

எருக்கம் பூ -பயத்தை ஒழித்து தைரியத்தைக் கொடுக்கும்.

செம்பருத்தி, அரளி -தவறான போக்கினைத் தடுத்து நல்ல வழிக்கு மாற்றிச் செல்லும்.

முல்லை, மல்லிகை -புனிதத்தன்மை தரும். சமநிலை அளிக்கும்.

துளசிப்பூவும் இலையும் -பக்தி தரும்.

மருக்கொழுந்து -வேண்டாதவற்றை விட்டு வேண்டியவற்றைப் பெறலாம்.

பவளமல்லி -சிறந்த விருப்பங்களை வளர்க்கும்.

நந்தியாவட்டம் -பொருள் பற்றாக் குறையை நீக்கி செல்வத்தைக் கொடுக்கும்.

No comments: