Wednesday, August 19, 2009

யார் இந்த டக்ளஸ் தேவானந்தா..,

தேர்தலில் குதிக்கும் ஒரு கொலையாளி…!

இவ் விடயம் http://www.nerudal.com/nerudal.9605.html பதிவு செய்யப்பட்டது

இந்தியாவில் வசித்துவந்தபோது, ஓடிய சவாரிக்குப் பணம் கேட்டதற்காக ஆட்டோ சாரதியைச் சுட்டுக் காயப்படுத்திய ஒரு மாமனிதன் தான் இந்த டக்ளஸ் தேவானந்தா. ஆரம்பத்தில், மக்களைப் பயமுறுத்திப் பணம்சம்பாதிக்க வேண்டுமென்பதற்காகவே, குறிக்கோள் ஏதுமற்ற இயக்கமான EPRLF இல் இணைந்து அடாவடித்தனங்களில் ஈடுபட்டு வந்தவர் இவர். பின் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைபட்டிருக்கும்போது கிறுக்குப் பிடித்தவர் போல் சிறைச்சுவர்களில் EPDP எனக் கிறுக்குவாராம். அதாவது; ஏதாவது ஒரு இயக்கத்தைத் தானும் ஆரம்பித்து; பொதுமக்களையும் புத்திஜீவிகளையும் பயமுறுத்தி, அதன்மூலம் தானும் ஒரு சமுதாய அந்தஸ்தைப் பெற்றுவிட இவர் ஆரம்பித்த ஒரு தறுதலை இயக்கம்தான் முகச்சவரம் செய்துகொள்ளாத தாடித்தோழர்களைக் கொண்ட EPDP எனப்பட்டது.

ஆரம்பத்தில் மக்களை மிரட்டிப் பணம் பறித்த இந்தக்கூட்டம், வடமாகாணத்தின் நகரப்புறங்களில் அதிகமாக அடாவடிகளில் ஈடுபடுவோரைத் தம்முடன் இணைத்துக்கொண்டது. காரணம்; இவர்களது இலக்கு அடாவடி செய்வது மட்டுமே. பின்னாளில், ஸ்ரீலங்கா அரசுடன் இணைவதற்குப் பல முயற்சிகள் எடுத்தும் அது பலன்பெறாத நிலையில், ஸ்ரீலங்கா அரசுடன் இணைந்துகொள்ள வேண்டும் என்ற ஒரே ஒரு காரணத்திற்காகவே, தாம் புலிகளுக்கு எதிரானவர்கள் எனக் காட்டிக்கொள்ளத் தொடங்கினார்கள். அதை வெளிப்படையாகக் காட்டிக்கொள்வதற்காக; விடுதலைப்புலிகளின் செயற்பாடுகளை இராணுவத்தினருக்குத் தெரியப்படுத்துவது அல்லது அவர்களைக் காட்டிக்கொடுப்பது, அவர்களின் பெற்றோர் உறவினர்களைக் கொடுமைப்படுத்துவது, அவர்களுக்கு உணவு கொடுப்பவர்களைச் சுட்டுக்கொலைசெய்வது, தமக்குப் பணம் தராதவர்களை விடுதலைப்புலிகள் எனக்கூறி கடத்திச் சென்று கொலை செய்வது போன்ற கைங்கரியங்களில் இவர்கள் ஈடுபடத்தொடங்கினார்கள்.

பின்னாளில், தமிழ்மக்கள் மீது மென்போக்கைக் கடைப்பிடித்த இவர்களது தோழர்களே, இவர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டதும் ஒரு கசப்பான வரலாறு. அதற்குச் சிறந்த உதாரணம்; யாழ் மாவட்டத்தில் செயற்பட்டு வந்த முக்கிய பொறுப்பாளர்களில் ஒருவரான ரொபேர்ட் என்பவர். இவர் தமிழ் மக்களோடும், தமிழீழ விடுதலைப் புலிகளோடும் இணைந்து செயற்பட அதிக விருப்பம் காட்டினார். அது தமக்கு இடையூறாக அமைத்துவிடும் என்ற ஒரே ஒரு காரணத்திற்காக, டக்ளஸ் தேவானந்தாவின் நேரடிப்பணிப்புரையின் கீழ் அதிகாலை வேளை உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது சுட்டுக்கொலை செய்யப்பட்டார். பின்பு அந்தப் பழி விடுதலைப்புலிகள் மீது சுமத்தப்பட்டது. ஆனால் EPDP குழுவாலேயே அவர் சுடப்பட்டார் என்பதுவே நிதர்சனமான உண்மை.

இவர்களால் அநியாயமாகச் சுட்டுக்கொலை செய்யப்பட்ட மற்றுமொருவர், கொழும்பு நகரில் EPDP யின் வெளியீடுகளை மேற்பார்வை செய்தவந்த பாலா எனப்பட்ட பாலசுந்தரம். EPDP யினரின் அட்டூழியங்களை பின்னாளில் நன்றாகப்புரிந்தகொண்ட இவர், அவர்களை விட்டு விலகித் தமிழீழ விடுதலைப்புலிகளோடு இணைந்து செயற்படவிருப்பம் கொண்டிருந்தார். அதற்காக; மிகவும் இரகசியமான முறையில் விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர்களில் ஒருவரான பாலகுமார் அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி, தாம் குடும்பத்தினரோடு கிளிநொச்சிக்கு வந்து சேரவிருப்பதாகவும், தம்மை ஏற்றுக்கொள்ளுமாறும் அவர்களிடம் வேண்டியிருந்தார். அதற்கு விடுதலைப்புலிகளின் தலைமையும் சம்மதம் அளித்திருந்தது. ஆனால்; இதை எப்படியோ தெரிந்துகொண்ட டக்ளஸ், மிகவும் புத்திசாதுரியத்துடன் அவர் மீதான படுகொலை விளையாட்டை நடாத்தியிருந்தார். அது எப்படியெனில்; தினமும் பாலா அவர்களை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்ல EPDP குழுவினர் அவரது வீட்டு வாசலிற்கு சரியாக 8:30 மணிக்கு வருவார்கள். அந்தக் குழுவினரோடு இணைந்தே பாலா அவர்கள் நாரகேன்பிட்டியில் இருக்கும் அலுவலகத்திற்குச் செல்லவது வழக்கம். ஆனால், இவர் சுடப்பட்டு இறந்த அன்று காலைஇ குறிப்பிட்ட நேரத்திற்கு இவரை அழைத்துச் செல்லும் குழுவினர் அங்கு வந்திருக்கவில்லை. இவர் தொலைபேசியில் அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு கேட்டபொழுது, இன்னும் சிறிது நேரத்தில் தாம் வந்துவிடுவதாகவும், வீட்டிற்கு வெளியே வந்து வாசலில் காத்திருக்குமாறும் பதில் தரப்பட்டது. அதற்கமைவாக பாலா அவர்கள் வீட்டுவாசலடியில் காத்திருந்தபோது, உந்துருளியில் வந்தவர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். பின்பு அந்தப்பழியும் விடுதலைப்புலிகள் மீது சுமத்தப்பட்டது. ஆனால், தமது கணவர் EPDP யினராலேயே சுடப்பட்டார் என்பது அவரது மனைவிக்கே நன்றாகத்தெரிந்த ஒரு விடயம். உயிர்ப்பயம் காரணமாக, இன்றும் அவர் மௌனமாக வாழ்ந்துவருகிறார்.

மிகவும் கேவலமான முறையில் செயற்பட்டுவந்த இந்த EPDP ஒட்டுக்குழு 1998ஆம் ஆண்டு களுத்துறைச் சிறைச்சாலைக்குக் கைதிகளைப் பார்வையிடச் சென்றிருந்தபோது, தமிழ் இளைஞர்களால் நையப்புடைக்கப்பட்டது. ஆனாலும் டக்ளஸ் உயிர்தப்பினார். பம்பலப்பிட்டியில் மிகவும் பாதுகாப்பான முறையில் இவர்களின் தலைமை அலுவலகம் இயங்கிவருகிறது. அலுவலகத்தின் முன்புறமாக, பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரியும், இடதுபுறமாக, செஞ்சிலுவைச்சங்கத்தின் அலுவலகமும் அமையப்பெற்று இருக்கும் அவ்விடத்தில் முற்றுமுழுதாக மக்கள் நடமாட்டம் EPDP யினராலும், ஸ்ரீலங்கா இராணுவத்தினராலும், கண்காணிக்கப்பட்டு வருகிறது.

கிளிநொச்சியை சொந்த இடமாகக் கொண்டிருந்த காரணத்தினால்; EPDPயினரின் அலுவலகத்திற்கு அருகாமையில்; பெட்டிக்கடை வைத்திருந்த ஒரு அப்பாவித் தமிழ் இளைஞர் 2006ஆம் ஆண்டில் சுட்டுக்கொலைசெய்யப்பட்டார். சுடப்படுவதற்கு முன்தினம் இரவு, EPDP ஆயுததாரிகளால் அச்சுறுத்தப்பட்ட நிலையில், மனித உரிமைகள் கண்காணிப்பகத்தில் இவர் முறையீடு செய்திருந்தார். ஆனாலும் மறுதினம் இவர் குழுவினரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.பின்னாளில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவிராஜ், மகேஸ்வரன் ஆகியோரும் இக்குழுவினராலேயே சுட்டுக்கொல்லப்பட்டனர். இதைவிடவும் எமக்குத்தெரியாத எத்தனையோ புத்திஜீவிகள், கல்விமான்கள் இவர்களாளல் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருக்கின்றனர்.

பின்பு, இந்து கலாச்சார அலுவல்கள் அமைச்சைத் தனதாக்கிக் கொண்ட டக்ளஸ், தமது பழைய எதிரியான மகேஸ்வரன் அவர்களை சுட்டுக்கொலைசெய்தார். அதைக்கொலையாளியே நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டிருந்தார். இன்று, தேர்தல் காலம் களைகட்டியிருக்கும் வேளையில் ஏனைய கட்சிகளை மிரட்டுவதிலும், ஏனைய கட்சிகளின் சுவரொட்டிகளுக்கு கறுப்புவர்ணம் பூசியும், தமது தேர்தல் பிரச்சாரத்தை மிகவும் கேவலமான முறையில் EPDP குழு நடாத்திவருகிறது. இதைவிட ஒருபடி மேலாகச்சென்று, ஒரு தொகுதி மக்களை நலன்புரி முகாம்களிலிருந்து பலாத்காரமாக வெளியேற்றி, அவர்களை மீளக்குடியேற்றிவிட்டோம் என வெளியுலகிற்குக் காட்டி, அதன்மூலம் தமது வாக்குவங்கியைப் பலப்படுத்தவும் EPDP ஒட்டுக்குழு முயன்றுவருகிறது. ஆனால்; நலன்புரி முகாம்களில் இருந்து வெளியேற்றப்பட்ட அம்மக்கள் துரையப்பா விளையாட்டரங்கில் வைத்து புகைப்படம் எடுக்கப்பட்ட பின், மீண்டும் நலன்புரிமுகாம்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். டக்ளசின் தேர்தல் பிரச்சாரத்திற்காக எமது மக்கள் அலைக்கழிக்கப்படுவதைத் தடுப்பபதற்கு அங்கு எவருமே இல்லையென்பதும் மிகவும் வேதனையான ஒரு உண்மை.எமது மக்களின் எதிர்காலம், மீண்டுமொருமுறை கொலைஞர்களின் கையில் செல்லாதிருக்க, நாம் அனைவரும் இத்தேர்தலில் ஒன்றிணைந்து நிற்போம். எமது மக்களின் விடிவிற்காக கடுமையாக உழைப்போம்.

பண்டாரவன்னியன்

No comments: